/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வேனில் ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது வேனில் ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது
வேனில் ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது
வேனில் ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது
வேனில் ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது
ADDED : ஜூன் 04, 2025 01:00 AM
ஈரோடு :ஈரோடு குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை எஸ்.ஐ., மேனகா, பறக்கும் படை தாசில்தார் ஜெயகுமார் மற்றும் போலீசார், கொடுமுடி அருகே அரசம்பாளையத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். ஒரு ஆம்னி வேனில், 800 கிலோ ரேஷன் அரிசி இருந்தது.
இது தொடர்பாக கொடுமுடி, சுல்தான் பேட்டை அபுதாகீர், 40, சாதிக் அலி, 53, ஆகியோரை கைது செய்தனர். ஆம்னி வேனுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, க.பரமத்தி, கலைபாளையம் சதீஷ், 43, என்பவரை தேடி வருகின்றனர். இவர் மீது ஏற்கனவே ரேஷன் அரிசி கடத்திய வழக்கு நிலுவையில் உள்ளது. கைதான இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.