/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தீப்பற்றி எரிந்த த.வெ.க., நிர்வாகி கார் காங்கேயத்தில் பரபரப்பு தீப்பற்றி எரிந்த த.வெ.க., நிர்வாகி கார் காங்கேயத்தில் பரபரப்பு
தீப்பற்றி எரிந்த த.வெ.க., நிர்வாகி கார் காங்கேயத்தில் பரபரப்பு
தீப்பற்றி எரிந்த த.வெ.க., நிர்வாகி கார் காங்கேயத்தில் பரபரப்பு
தீப்பற்றி எரிந்த த.வெ.க., நிர்வாகி கார் காங்கேயத்தில் பரபரப்பு
ADDED : ஜூன் 04, 2025 01:07 AM
காங்கேயம், காங்கேயத்தில் சாலையில் தீப்பற்றி எரிந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணத்தை சேர்ந்த, தமிழக வெற்றி கழக ஒன்றிய இணை செயலாளர் துரைராஜ், 40; திருப்பூருக்கு சொந்த வேலையாக பியஸ்டா காரில் காங்கேயம் வழியாக நேற்று காலை சென்றார்.
காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனை அருகே வந்தபோது, பானெட் பகுதியில் இருந்து கரும்புகை வந்தது. இதனால் உடனடியாக காரை நடுரோட்டில் நிறுத்தி இறங்கினார்.
அதேசமயம் கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. அப்பகுதியில் இருந்த மக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முற்பட்டனர்.
ஆனாலும் தகவலின்டி வந்த காங்கேயம் தீயணைப்பு நிலைய வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் காங்கேயம் பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா அருகில் இருந்து அரசு மருத்துவமனை வரை, ௩௦ நிமிடத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.