ADDED : செப் 20, 2025 02:07 AM
ஈரோடு, ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு சுரேஷ். முதல் நிலை காவலர் இன்பவாணன். இருவரும் கடந்த, 18ம் தேதி இரவில், ஈரோடு-பள்ளிபாளையம் மேம்பாலம் முன்பாக உள்ள சோதனை சாவடியில் பணியில் இருந்தனர். அப்போது ஈரோட்டில் இருந்து பள்ளிபாளையத்துக்கு மது குடித்துவிட்டு பைக்கில் ஒருவர் வந்தார்.
சோதனை செய்ததில் மது குடித்திருந்தது தெரிந்தது. வழக்குப்பதிவு செய்யாமல் தவிர்க்க ஒரு தொகை கேட்டுள்ளனர். அந்நபருக்கு கருங்கல்பாளையம் ஸ்டேஷனில் மற்றொரு ஏட்டுடன் பழக்கம் இருந்ததால், அவர் மூலம் சமாதானம் பேசியுள்ளார். ஆனாலும் ஒரு தொகை வேண்டுமென இருவரும் கறார் காட்டியுள்ளனர். இதுகுறித்து எஸ்.பி., சுஜாதா நடத்திய விசாரணையை தொடர்ந்து, இருவரும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.