/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சிவகிரி அருகே இரவில் 'டார்ச் லைட்' அடித்த சம்பவம் கொலை பீதியால் புகார்; 54 பேரிடம் விசாரணை சிவகிரி அருகே இரவில் 'டார்ச் லைட்' அடித்த சம்பவம் கொலை பீதியால் புகார்; 54 பேரிடம் விசாரணை
சிவகிரி அருகே இரவில் 'டார்ச் லைட்' அடித்த சம்பவம் கொலை பீதியால் புகார்; 54 பேரிடம் விசாரணை
சிவகிரி அருகே இரவில் 'டார்ச் லைட்' அடித்த சம்பவம் கொலை பீதியால் புகார்; 54 பேரிடம் விசாரணை
சிவகிரி அருகே இரவில் 'டார்ச் லைட்' அடித்த சம்பவம் கொலை பீதியால் புகார்; 54 பேரிடம் விசாரணை
ADDED : மே 10, 2025 01:17 AM
ஈரோடு, சிவகிரி அருகே மாரப்பம்பாளையம், வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் குணசேகரன். திருப்பூர் மாவட்டம் முத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர். இவர் மனைவி சவிதா. தந்தை கருப்பண்ணன், 74, தாய் லட்சுமி, 65; இவர்களுடன் வசிக்கின்றனர். இவர்களது வீடு, கீழ்பவானி வாய்க்கால் கரையில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, கருப்பணன், லட்சுமி வீட்டில் இருந்தபோது நாய் தொடர்ந்து குரைத்துள்ளது. அப்போது மூன்று பேர் வாசலில் நின்று 'டார்ச் லைட்' அடித்து பார்த்துள்ளனர். கருப்பண்ணன் கூச்சலிடவே வாய்க்காலில் இறங்கி தப்பியுள்ளனர்.
அதேநேரம் இவரது வீட்டருகே பாலு என்பவரது நாய், வாந்தி எடுத்தது. இவற்றை வைத்து பார்த்து, சிவகிரி தம்பதியை கொன்ற நபர்கள் வந்திருப்பார்களோ என்ற அச்சம் தொற்றியது. புகாரின் பேரில் சிவகிரி போலீசார், பெருந்துறை டி.எஸ்.பி., கோகுலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் விசாரித்தனர்.
இதுபற்றி எஸ்.பி., அலுவலக செய்திக்குறிப்பில் கூறியதாவது:
கருப்பண்ணன் புகாரின்படி சிவகிரி போலீசார் விசாரித்தனர். இதில் பக்கத்து தோட்டத்தை சேர்ந்த கண்ணுசாமி, இரவில் பீர்க்கன் காய் பறிக்க டார்ச் லைட் அடித்து சென்றது தெரியவந்தது. அதேநேரம் அவ்வழியாக பைக்கில், விளாங்காட்டு வலசை சேர்ந்த உள்ளூர் நபர் சென்றதும் 'சிசிடிவி' பதிவில் தெரியவந்தது. பாலு என்பவர் வீட்டு நாய் அதிகம் சாப்பிட்டதால் வாந்தி எடுத்ததை, கால்நடை டாக்டர்கள் பரிசோதித்து உறுதிப்படுத்தினர். இச்சம்பவ நேரத்தில் அவ்வழியாக சென்ற, 54 நபர்களின் கைரேகை பதிவு செய்து, ஒப்பீடு பணி நடந்தது. எஸ்.பி., சுஜாதாவும் நேரில் விசாரித்தார்.
சிவகிரி பகுதியில் இரண்டு நாளில், 60 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 35 இடங்களில், 100 கேமரா பொருத்தும் பணி நிறைவு பெற்றுள்ளது. போலீசாரும் ரோந்தில் உள்ளனர். பொதுமக்கள் வதந்திகளை நம்பவும், பரப்பவும் வேண்டாம். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.