ADDED : ஜூலை 13, 2024 08:01 AM
ஈரோடு: ஆண்டுதோறும் ஆனி மாத உத்திர நட்சத்திரத்தில், சிவன் கோவில்களில் நடராஜருக்கு ஆனி திருமஞ்சன நிகழ்ச்சி நடக்கும்.
ஆனி மாத உத்திர நட்சத்திரம் நேற்று வந்தது. இதனால் ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன நிகழ்ச்சி, யாக பூஜையுடன் தொடங்கியது.பின் உற்சவரான நடராஜருக்கு பல்வேறு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. தொடர்ந்து வெள்ளி தேரில் நடராஜர், மேள தாளத்துடன், ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, பன்னீர்-செல்வம் பார்க், காமராஜர் வீதி வழியாக திருவீதி உலாவாக கொண்டு செல்லப்பட்டார். இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். * கோபி பச்சமலை முருகன் கோவிலில், சிவகாமி அம்பாள் சமேத நடராஜருக்கு ஆனி திருமஞ்சன மகா அபிஷேகம், 108 சங்-காபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது.காலை 8:30 மணி முதல், 11:00 மணி வரை, நடராஜருக்கு மகா ேஹாமம், 11:00 மணிக்கு மகா அபிஷேகம், மதியம் 108 சங்கா-பிேஷகம், மகா தரிசனம் நடந்தது. இதையடுத்து நடராஜரின் ஆனந்த நடன தரிசனம் நடந்தது. இந்நிகழ்வுகளில் திரளான பக்-தர்கள் பங்கேற்றனர்.சக்கரத்தாழ்வார் ஜெயந்தி தொடக்கம்ஈரோடு கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில், சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழா, மகா சுதர்சன யாகத்துடன் நேற்று தொடங்கியது. இரண்டாது நாளான இன்று காலை, 9:௦௦ மணிக்கு லட்ச ஆவர்த்தி ஹோமம் துவக்கம், வேத பாராயணம், சகஸ்கர நாம பாராயணம் நடக்கிறது. நாளை ஒரு லட்சத்து எட்டு ஆவர்த்தி ஹோமத்துடன் விழா நிறைவடைகிறது.