ADDED : செப் 09, 2025 01:51 AM
பவானி, பவானி அருகே வரதநல்லுாரில், காவிரி ஆற்றங்கரையில், பழைமையான செல்லியாண்டியம்மன் கோவில் உள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் கோவிலில் புகுந்து, உண்டியலில் இருந்த பணம், இரண்டு விளக்குகளை யாரோ திருடி சென்றுள்ளனர். புகாரின்படி பவானி போலீசார், களவாணியை தேடி வருகின்றனர்.