/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/புன்செய்புளியம்பட்டி அருகே எலக்ட்ரிக்கல் கடையில் திருட்டுபுன்செய்புளியம்பட்டி அருகே எலக்ட்ரிக்கல் கடையில் திருட்டு
புன்செய்புளியம்பட்டி அருகே எலக்ட்ரிக்கல் கடையில் திருட்டு
புன்செய்புளியம்பட்டி அருகே எலக்ட்ரிக்கல் கடையில் திருட்டு
புன்செய்புளியம்பட்டி அருகே எலக்ட்ரிக்கல் கடையில் திருட்டு
ADDED : ஜன 06, 2024 07:28 AM
புன்செய் புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி அருகே பெரிய கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் நந்தகுமார், 43; பு.புளியம்பட்டி - அவிநாசி சாலையில் என்.ஆலாம்பாளையம் பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார்.நேற்று காலை கடை ஊழியர் கடையை திறந்து பார்த்தபோது, கடைக்கு பின்புறம் இருந்த கூலிங் சீட் எனப்படும் தகர சீட் உடைக்கப்பட்டிருந்தது.
இதனால் நந்தகுமாருக்கு தகவல் தெரிவித்தார். அவர் கடைக்கு வந்து பார்த்த போது, கடையில் வைத்திருந்த, 25 ஆயிரம் ரூபாய் திருட்டுப் போயிருந்தது தெரிய வந்தது.கடையில் பொருத்தப்பட்டிருந்த எட்டு சிசிடிவி கேமராவில் காட்சிகள் பதிவான ஹார்ட் டிஸ்க்கும் திருடப்பட்டது தெரிந்தது.நந்தகுமார் புகாரின்படி புன்செய்புளியம்பட்டி போலீசார், கைவரிசை காட்டிய ஆசாமியை தேடி வருகின்றனர்.