கல்லூரி மாணவியை பின் தொடர்ந்தவர் கைது
கல்லூரி மாணவியை பின் தொடர்ந்தவர் கைது
கல்லூரி மாணவியை பின் தொடர்ந்தவர் கைது
ADDED : ஜன 06, 2024 07:28 AM
நம்பியூர்: நம்பியூர், கணேசன் புரத்தை சேர்ந்த ஒரு மாணவி, தனியார் கல்லுாரியில் இரண்டாமாண்டு படிக்கிறார்.
கடந்த, 2ம் தேதி கல்லுாரி முடிந்து, இரவில் நம்பியூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து, வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது காரில் பின்தொடர்ந்து வந்த ஆசாமி, மாணவியிடம் விலாசம் கேட்டுள்ளார். அவர் பேசாமல் நடந்த நிலையில், மீண்டும் தொடரவே சத்தமிட்டார்.இதைக்கேட்டு அப்பகுதி மக்கள் வரவே, ஆசாமி காரில் பறந்து விட்டார். இதுகுறித்து நம்பியூர் போலிசில் புகார் தரப்பட்டது. சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரித்ததில், மேட்டுப்பாளையம், எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த ஷங்கர் தயாள் சர்மா, 42, என்பது தெரிந்தது. முதல் மனைவி இறந்த நிலையில், இரு மகன்கள் உள்ளனர். இரண்டாவது மனைவியுடன் வசித்து வருவதும் தெரிந்தது. அவரை நேற்று கைது செய்த போலீசார், கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.