/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சென்னிமலையில் பிட்டுக்கு மண் சுமக்கும் விழா சென்னிமலையில் பிட்டுக்கு மண் சுமக்கும் விழா
சென்னிமலையில் பிட்டுக்கு மண் சுமக்கும் விழா
சென்னிமலையில் பிட்டுக்கு மண் சுமக்கும் விழா
சென்னிமலையில் பிட்டுக்கு மண் சுமக்கும் விழா
ADDED : செப் 03, 2025 12:52 AM
சென்னிமலை, சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்களில், மதுரை மாநகரில் பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்வும் ஒன்று. இந்நிகழ்வு மதுரை மாநகரில் வைகை நதியில் நடந்தது.
இதில் வந்தி மூதாட்டி, பாண்டிய மன்னனுக்கும் சிவபெருமான் தரிசனம் தந்தார். அந்த நாளே ஆவணி மாத மூல நட்சத்திர நாளாக கருதப்படுவது உண்டு. சென்னிமலை கைலாசநாதர் கோயிலில் இவ்விழா, 45 ஆண்டுகளாக நடந்து வருகிறது.
நடப்பாண்டு விழா நேற்று காலை, 11:௦௦ மணிக்கு கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து சென்னிமலை மலை கோவிலுக்கு செல்லும் பார்க் ரோட்டில், வைகை கரை போல் அமைக்கப்பட்டது. மாலை, 5:20 மணிக்கு வைகை கரைக்கு கைலாசநாதர், சிவகாமி அம்மாள், வள்ளி-தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி என ஐந்து சுவாமிகளும், சகடை தேரில் எழுந்தருளினர்.
சென்னிமலை முருகன் கோவில் தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாதசிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஓதுவார் மூர்த்தி ஆனந்த் சிவபெருமானின் பிட்டுத் திருவிளையாடல் குறித்த பாடல்களை பாடினார்.
இதில் ஏராளமாக பெண்கள் குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து வைகை கரையில் ஊற்றி வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதமாக பிட்டு வழங்கப்பட்டது.