/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/௨ம் வகுப்பு மாணவியை கடத்திய பைக் ஆசாமிகள் தந்தை பணிபுரியும் கடை அருகே விட்டு சென்றனர்௨ம் வகுப்பு மாணவியை கடத்திய பைக் ஆசாமிகள் தந்தை பணிபுரியும் கடை அருகே விட்டு சென்றனர்
௨ம் வகுப்பு மாணவியை கடத்திய பைக் ஆசாமிகள் தந்தை பணிபுரியும் கடை அருகே விட்டு சென்றனர்
௨ம் வகுப்பு மாணவியை கடத்திய பைக் ஆசாமிகள் தந்தை பணிபுரியும் கடை அருகே விட்டு சென்றனர்
௨ம் வகுப்பு மாணவியை கடத்திய பைக் ஆசாமிகள் தந்தை பணிபுரியும் கடை அருகே விட்டு சென்றனர்
ADDED : பிப் 06, 2024 10:54 AM
ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், 43; கறிக்கடை ஊழியர். இவரின் ஆறு வயது மகள், இரண்டாம் வகுப்பு படிக்கிறார். பள்ளி முடிந்து நேற்று மாலை, 4:45 மணி அளவில் வீட்டுக்கு நடந்து சென்றார். வீட்டருகே சென்ற நிலையில், பைக்கில் வந்த இருவர், சிறுமியை பைக்கில் ஏற்றி கடத்தி சென்றனர்.
இதற்கிடையில் மாலை, 5:45 மணிக்கு செல்வராஜ் வேலை செய்யும் கறிக்கடை அருகே, சிறுமியை விட்டுவிட்டு சென்றனர். மகளை கண்டவுடன் அதிர்ச்சி அடைந்த செல்வராஜ், விபரங்களை கேட்டறிந்து, கருங்கல்பாளையம் போலீசில் புகார் செய்தார்.
சிறுமி அணிந்திருந்த தோட்டுக்காக கடத்தியிருக்கலாம். கவரிங் என்பதால் இறக்கி விட்டிருக்கலாம். ஆனாலும், சிறுமியின் தந்தை வேலை செய்யும் கடை அருகில் விட்டு சென்றதால், செல்வராஜுக்கு தெரிந்த நபர்கள், இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று, போலீசார் சந்தேகிக்கின்றனர். 'சிசிடிவி' கேமரா பதிவுகளின் அடிப்படையில், பைக் ஆசாமிகளை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.