/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சட்டை கிழிந்த ஆத்திரத்தில் பஸ் மீது கல் வீசிய ஆசாமிசட்டை கிழிந்த ஆத்திரத்தில் பஸ் மீது கல் வீசிய ஆசாமி
சட்டை கிழிந்த ஆத்திரத்தில் பஸ் மீது கல் வீசிய ஆசாமி
சட்டை கிழிந்த ஆத்திரத்தில் பஸ் மீது கல் வீசிய ஆசாமி
சட்டை கிழிந்த ஆத்திரத்தில் பஸ் மீது கல் வீசிய ஆசாமி
ADDED : ஜன 06, 2024 07:28 AM
சென்னிமலை: சென்னிமலை பஸ் ஸ்டாண்டில் நேற்று முன்தினம் இரவு, 11:௦௦ மணியளவில், ஒரு அரசு டவுன் பஸ் காங்கேயம் செல்ல வந்தது.
டிரைவர், கண்டக்டர் இருவரும் அருகிலிருந்த கடைக்கு டீ குடிக்க சென்று விட்டனர். அப்போது வந்த ஒரு போதை ஆசாமி கல் வீசியதில், அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.போதை ஆசாமியை அங்கிருந்தோர் சுற்றி வளைத்து பிடித்து, சென்னிமலை போலீசில் ஒப்படைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்த பாபு, ௫௨, என்பதும், ஹோட்டலில் தொழிலாளியாக வேலை செய்து வருவதும் தெரிய வந்தது. பஸ் ஸ்டாண்ட் உள்பகுதியில் அவர் படுத்திருந்தபோது, யாரோ ஒருவரிடம் ஏற்பட்ட தகராறில், அவரது சட்டை கிழிந்துள்ளது.அந்த கோபத்தில் டவுன் பஸ் மீது கல் வீசியதாக தெரிவித்தார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.