Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்காலில் முதல் போக சாகுபடிக்காக நீர் திறப்பு

தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்காலில் முதல் போக சாகுபடிக்காக நீர் திறப்பு

தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்காலில் முதல் போக சாகுபடிக்காக நீர் திறப்பு

தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்காலில் முதல் போக சாகுபடிக்காக நீர் திறப்பு

ADDED : ஜூலை 13, 2024 12:47 AM


Google News
கோபி: தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்காலின், முதல் போக சாகுபடிக்காக, நேற்று தண்ணீர் திறக்கப்பட்-டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணையில் தடுக்கப்பட்டு, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால் மூலம், 24 ஆயிரத்து, 504 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இரு பாசனங்களுக்கும், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, நேற்று காலை 9:45 மணிக்கு, முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தடப்பள்ளி வாய்க்காலில், 300 கன அடி, அரக்கன்கோட்டை வாய்க்காலில், 200 கன அடி திறக்கப்பட்டது. வரும் நாட்களில் நீர் திறப்பு படிப்-படியாக உயர்த்தப்படும். நவ.,8ம் தேதி வரை, 120 நாட்களுக்கு நீர் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்-தனர்.

இந்நிகழ்வில் கோபி நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் கல்பனா, எம்.பி., அந்தியூர் செல்-வராஜ், தி.மு.க., மாவட்ட செயலாளர் நல்லசிவம், தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன சங்க தலைவர் சுபி-தளபதி உட்பட பலர் பங்கேற்றனர். தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனங்களுக்கு, நீர் திறப்பு நிகழ்வில் இதுவரையில், ஆளுங்கட்சி பிரமு-கர்கள், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் மட்டுமே அதிகம் பங்கேற்றுள்ளனர். கோபி ஆர்.டி.ஓ., அல்லது சப்-கலெக்டர் அந்தஸ்த்தில் வருவாய் துறை அதிகாரிகள் பங்கேற்றதில்லை. நேற்று நடந்த நிகழ்வில், கோபி ஆர்.டி.ஓ., கண்ணப்பன், கோபி தாசில்தார் கார்த்திக் பங்கேற்றனர். இதுகுறித்து ஆர்.டி.ஓ., கண்ணப்பனிடம் கேட்டதற்கு, ''கலெக்டர் உத்தரவின் பேரில் பங்கேற்றேன்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us