Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கிரகணத்தால் கோவில்களில் நடை அடைப்பு

கிரகணத்தால் கோவில்களில் நடை அடைப்பு

கிரகணத்தால் கோவில்களில் நடை அடைப்பு

கிரகணத்தால் கோவில்களில் நடை அடைப்பு

ADDED : மார் 04, 2026 09:14 AM


Google News
Latest Tamil News
சென்னிமலை: சந்திர கிரகணம் நேற்று மதியம், 3:20 மணி முதல் மாலை, 6:50 வரை நிகழ்ந்தது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் பல கோவில்களில் நடை சாத்தப்பட்டது.

இதன்படி சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உச்சி கால பூஜை முன்னதாக நடந்து, 12:௦௦ மணிக்கு நடை அடைக்கப்பட்டது. முன்னதாக நேற்று செவ்வாய்கிழமை என்பதால், அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் வந்திருந்தனர்.

பகல், 11:00 மணி முதலே பக்தர்களை வெளியேற்றும் பணியை தொடங்கி சரியாக, 12:00 மணிக்கு சுவாமி மூலஸ்தான கதவு, ராஜ கோபுர கதவுகள் அடைக்கப்பட்டன. இன்று அதிகாலை கிரகண தோஷ நிவர்த்தி பூஜை செய்து, 6:௦௦ மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்று, கோவில் நிர்வாகம் தெரிவித்தது.

இதேபோல் சந்திர கிரகணத்தால், கோபி அருகே பாரியூர் கொண்டத்துக்காளியம்மன், அமரபணீஸ்வரர், ஆதிநாராயண பெருமாள் வகையறா கோவில், பச்சைமலை மற்றும் பவளமலை முருகன் கோவில்கள், அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில், பவானி செல்லியாண்டியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களின் நடை அடைக்கப்பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow Us