ADDED : செப் 12, 2025 01:14 AM
ஈரோடு, :ஈரோட்டில், 'மாபெரும் தமிழ் கனவு திட்டம்' என்ற தலைப்பில், மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்து பேசினார். இந்நிகழ்வில் பங்கேற்போருக்கு உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி நுால், தமிழ் பெருமிதம் குறித்த குறிப்பேடும் வழங்கப்படுகிறது என்றார்.
பொருளியல் வல்லுனர் சோம வள்ளியப்பன், 'புதிய உலகம்; புதிய வாய்ப்புகள்' என்ற தலைப்பில் பேசினார். டி.ஆர்.ஓ., சாந்தகுமார், கல்லுாரி கல்வி மண்டல இணை இயக்குனர் செண்பகலட்சுமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருக்குமரன் உட்பட பலர் பங்கேற்றனர்.