ADDED : மே 23, 2025 12:58 AM
ஈரோடு, சத்தியமங்கலம் ரீடு தொண்டு நிறுவனம் சார்பில், கோடைகால பயிற்சி நடந்தது. இதில் அடிப்படை ஆங்கிலம் கற்றுக் கொள்ளுதல் மற்றும் ஓவியம் வரைதல் மற்றும் விளையாட்டு, பாடல்கள் மூலம் நடந்தது. சத்தி மற்றும் கோபி பகுதிகளில் ஒரு வாரம் இந்த பயிற்சி முகாம்
நடந்தது. இதில் இப்பகுதி கிராமங்களை சேர்ந்த, 65 குழந்தைகள் பயன் பெற்றனர். ஓவிய பயிற்சியாளர் அருள் பிரகாஷ், ஆங்கில பயிற்சியாளர் சூர்யா உள்ளிட்ட பயிற்சியாளர் பயிற்சி அளித்தனர். கோடைகால பயிற்சியை ரீடு இயக்குனர் கருப்புசாமி தலைமை வகித்து நடத்தினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை ரீடு நிறுவன பணியாளர் செய்தனர்.