/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரயில் மீது கல் வீசினால் 7 ஆண்டு சிறை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ரயில் மீது கல் வீசினால் 7 ஆண்டு சிறை மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ரயில் மீது கல் வீசினால் 7 ஆண்டு சிறை மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ரயில் மீது கல் வீசினால் 7 ஆண்டு சிறை மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ரயில் மீது கல் வீசினால் 7 ஆண்டு சிறை மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : செப் 13, 2025 01:28 AM
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் ரயில்வே தண்டவாளங்களில் கற்கள் வைப்பதை தடுக்கவும், ஓடும் ரயில்கள் மீது கற்கள் எறிவதை தடுக்கவும், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் (ஆர்.பி.எப்.,), ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளை
மேற்கொள்கின்றனர்.
இதுகுறித்து ஈரோடு வாய்க்கால் மேட்டில் கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, ஆர்.பி.எப்., சார்பில் இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஓடும் ரயில்கள் மீது கல் எறிவதாலும், தண்டவாளங்களில் கற்கள் வைப்பதால் ஏற்படும் ஆபத்து, இச்செயல்களில் ஈடுபட்டால் கைதாகி, நீதிமன்றத்தில் ஏழாண்டு வரை சிறை தண்டனை பெற வாய்ப்புள்ளது என்றும் அறிவுறுத்தினர். ரயில்கள் மீது கல் எறிவதாலும், தண்டவாளங்களில் கல் வைப்பதால் ஏற்படும் பாதிப்புக்களை குறும்படமாக வெளியிட்டனர்.