விளையாட்டரங்கத்தின் பெயர் பலகை சேதம்
விளையாட்டரங்கத்தின் பெயர் பலகை சேதம்
விளையாட்டரங்கத்தின் பெயர் பலகை சேதம்
ADDED : செப் 06, 2025 01:32 AM
காங்கேயம் :காங்கேயம் அடுத்த சிவன்மலை ஊராட்சியில், 3 கோடி ரூபாய் மதிப்பில் உள் விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டது. காணொளி வாயிலாக கடந்த மாதம் திறக்கப்பட்டது. அரங்கத்தின் நுழைவுவாயில் ஆர்ச்சில் பெயர் பலகை, முதல்வரின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன் அரங்கத்தின் நுழைவாயில் பெயர் பலகையை, மர்ம ஆசாமிகள் சேதம் செய்துள்ளனர். இதில் முதல்வரின் படத்தையும் உடைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது.