Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ இ.பி.எஸ்., பிரசாரம் நடக்கும் இடங்களில் எஸ்.பி., ஆய்வு

இ.பி.எஸ்., பிரசாரம் நடக்கும் இடங்களில் எஸ்.பி., ஆய்வு

இ.பி.எஸ்., பிரசாரம் நடக்கும் இடங்களில் எஸ்.பி., ஆய்வு

இ.பி.எஸ்., பிரசாரம் நடக்கும் இடங்களில் எஸ்.பி., ஆய்வு

ADDED : அக் 06, 2025 04:34 AM


Google News
ஈரோடு: அ.தி.மு.க., பொது செயலாளர் இ.பி.எஸ்., ஈரோடு மாநகர் மாவட்டத்தில் வரும், 10ம் தேதி மாலை பிரசாரம் மேற்கொள்-கிறார். மொடக்குறிச்சி தொகுதி சோளிபாளையம், ஈரோடு மேற்கு தொகுதி வில்லரசம்பட்டியில் பிரசாரம் நடக்கிறது. இவ்விரு இடங்களிலும் தலா, 10 ஆயிரம் பங்கேற்க இருப்பதாக அ.தி.மு.க., தரப்பில் போலீசா-ருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சோளிபாளையம் கூட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணி, வில்லரசம்பட்டி

பகுதிக்கு மாநகர் மாவட்ட செயலாளர் ராமலிங்கம், ஏற்பட்டா-ளர்களாக தங்களை பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இ.பி.எஸ்., பிரசாரம் செய்யவுள்ள இடத்தை, ஈரோடு எஸ்.பி., சுஜாதா, போலீஸ் அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு செய்தார். பிரசார கூட்ட பகுதிக்கு தலா, 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் கூட்டம் நடத்த சில வழி-காட்டு நெறிமுறைகளை தெரிவித்துள்ளது. இதை முறையாக பின்-பற்ற அறிவுறுத்தியுள்ளோம். அதாவது அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே பிரசாரம் செய்ய வேண்டும். கூட்டத்துக்கு வருபவர்கள் அமர இருக்கை வசதி செய்ய வேண்டும். வண்டிகள் சென்று வர அவசரகால வழி விட வேண்டும். வாகனங்கள் நிறுத்த குறிப்பிட்ட இடத்தை ஒதுக்க வேண்டும். குடிநீர் வசதி, ஆம்புலன்ஸ் வசதி செய்திருக்க வேண்டும். ரோடு ஷோவுக்கு அனுமதியில்லை. பிரசாரம் மட்டுமே செய்ய வேண்டும். பிரசாரம் செய்ய குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி தரப்படும். இதற்கான அனுமதி அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்கள் மூலம் நாளை (இன்று) வழங்-கப்படும். இவ்வாறு கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us