சகோதரர் கண் முன் சகோதரி விபத்தில் பலி
சகோதரர் கண் முன் சகோதரி விபத்தில் பலி
சகோதரர் கண் முன் சகோதரி விபத்தில் பலி
ADDED : ஜன 13, 2024 04:11 AM
புன்செய்புளியம்பட்டி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த காட்டம்பட்டியை சேர்ந்தவர் செந்தில்வேல்.
இவரது மனைவி மகேஸ்வரி, 47; சிறுமுகையை அடுத்த செங்கப்பள்ளியை சேர்ந்த உறவினர் ஒருவரின் துக்க நிகழ்வுக்கு, மகேஸ்வரி வந்தார். பொள்ளாச்சி செல்வதற்காக அவருடைய சகோதரர் சக்திவேலுடன், பிளாட்டினா பைக்கில் புன்செய் புளியம்பட்டி பஸ் ஸ்டாண்டு நோக்கி நேற்று மாலை சென்றனர். டாணாபுதூர் போலீஸ் சோதனை சாவடி அருகே, நால்ரோட்டில், பின்னால் வந்த டிப்பர் லாரி டூவீலர் மீது மோதியது. இதில் கீழே விழுந்த மகேஸ்வரி மீது டிப்பர் லாரியின் முன் சக்கரம் ஏறி இறங்கியதில், தலை நசுங்கி பலியானார். இருசக்கர வாகனத்துடன் வலது புறம் விழுந்த சக்திவேல் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். விபத்து குறித்து நொச்சிகுட்டையை சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் முருகன் மீது, புன்செய்புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.