/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பெருந்துறை சாலையோரங்களில் ஆந்திரா நாவல் பழம் விற்பனைபெருந்துறை சாலையோரங்களில் ஆந்திரா நாவல் பழம் விற்பனை
பெருந்துறை சாலையோரங்களில் ஆந்திரா நாவல் பழம் விற்பனை
பெருந்துறை சாலையோரங்களில் ஆந்திரா நாவல் பழம் விற்பனை
பெருந்துறை சாலையோரங்களில் ஆந்திரா நாவல் பழம் விற்பனை
ADDED : ஜூன் 01, 2024 06:41 AM
பெருந்துறை : ஆந்திராவில் நாவல் பழ சீசன் தற்போது தொடங்கியுள்ளது. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், நாவல் பழம் வருகிறது.
சாலையோரங்களில் சில்லரை வியாபாரிகள், விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். பெருந்துறை பகுதியில் சீனாபுரம் ரோடு, சென்னிமலை ரோடு, கோவை ரோடு, பவானி ரோடு, ஆர்.எஸ்.ரோடு பகுதிகளில், ஆந்திர நாவல் பழ விற்பனை ஜோராக நடக்கிறது.இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: ஆந்திர மாநிலத்தில் சித்துார், குண்டூர், ராஜமுந்திரி, விஜயவாடா, குடிவாடா பகுதிகளில் தற்போது நாவல் பழ சீசன் உச்சத்தை அடைந்துள்ளது. அங்கிருந்து லாரிகளில் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்கிறோம். தமிழகத்தில் இன்னும் சீசன் தொடங்கவில்லை.ஜூன் மாத பாதியில் தான் தமிழக நாவல் பழம் விற்பனைக்கு வரும். ஒரு கிலோ நாவல் பழம், 400 ரூபாய்க்கு விற்கிறோம். சர்க்கரை நோயக்கு மருந்தாக பயன்படுவதால், மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இது மட்டுமின்றி நாட்டுப்புற நாவல் பழம், வீரிய ரக குண்டு நாவல் பழங்களையும் விற்பனை செய்கிறோம்.இவ்வாறு கூறினர்.