/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/அரசு திட்டங்களில் வீடுகள் பராமரிப்பு திட்டத்தில் ௬,௧௧௫ பயனாளிகள் தேர்வுஅரசு திட்டங்களில் வீடுகள் பராமரிப்பு திட்டத்தில் ௬,௧௧௫ பயனாளிகள் தேர்வு
அரசு திட்டங்களில் வீடுகள் பராமரிப்பு திட்டத்தில் ௬,௧௧௫ பயனாளிகள் தேர்வு
அரசு திட்டங்களில் வீடுகள் பராமரிப்பு திட்டத்தில் ௬,௧௧௫ பயனாளிகள் தேர்வு
அரசு திட்டங்களில் வீடுகள் பராமரிப்பு திட்டத்தில் ௬,௧௧௫ பயனாளிகள் தேர்வு
ADDED : ஜூன் 08, 2024 02:43 AM
ஈரோடு: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில், 2024-25ம் நிதி ஆண்டில், ஒரு வீட்டுக்கு, 3.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில், 4,000 வீடுகள் ஒதுக்கப்பட்டு, பயனாளிகள் தேர்வு துவங்கி உள்ளது.
இதுபோல, ஊரக பகுதிகளில், 2001க்கு முன், பல்வேறு அரசு திட்டங்களில், 2.50 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை பழுது பார்த்து புனரமைக்கும் திட்டத்தை அரசு அறிவித்தது. இதன்படி மாவட்டத்தில் நடப்பாண்டில், 6,115 வீடுகள் இத்திட்டத்தில் புனரமைக்கப்பட உள்ளன.
இதில் ஓட்டு வீடுகளுக்கு, 32,000 ரூபாய், மலைப்பகுதியில் உள்ள ஓட்டு வீடுகளுக்கு, 42,000 ரூபாய், கான்கிரீட் வீடுகளுக்கு, 55,000 ரூபாய், மலைப்பகுதி கான்கிரீட் கூரைக்கு, 72,0000 ரூபாய் வழங்கப்படுகிறது. பெரிய அளவில் பழுது ஏற்பட்டிருந்தால், 70,000 ரூபாய், மலைப்பகுதியாக இருந்தால், 92,000 ரூபாய், கான்கிரீட் கூரை வீடுகளுக்கு, 1.50 லட்சம் ரூபாய், மலைப்பகுதியாக இருந்தால், 1.85 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இத்திட்டத்துக்கும் பயனாளிகள் தேர்வு செய்யும் பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.