சலுான் கடைக்காரர் கார் மோதியதில் பலி
சலுான் கடைக்காரர் கார் மோதியதில் பலி
சலுான் கடைக்காரர் கார் மோதியதில் பலி
ADDED : ஜூன் 06, 2025 12:59 AM
ஈரோடு, ஈரோடு, பெரியார் நகர், சிதம்பரம் காலனியை சேர்ந்தவர் ரமேஷ், 57, சலுான் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு பெரியார் நகர் சாலையில் நடந்து சென்றார்.
அப்போது கார் மோதியதில் பலத்த காயம் அடைந்தார். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை, ஈரோடு டவுன் போலீசார் தேடி வருகின்றனர்.