/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ரூ.104 கோடியில் திட்டப்பணி பெருந்துறை யூனியனில் துவக்கம்ரூ.104 கோடியில் திட்டப்பணி பெருந்துறை யூனியனில் துவக்கம்
ரூ.104 கோடியில் திட்டப்பணி பெருந்துறை யூனியனில் துவக்கம்
ரூ.104 கோடியில் திட்டப்பணி பெருந்துறை யூனியனில் துவக்கம்
ரூ.104 கோடியில் திட்டப்பணி பெருந்துறை யூனியனில் துவக்கம்
ADDED : ஜன 08, 2024 11:16 AM
பெருந்துறை: பெருந்துறை ஒன்றியத்தில், 104 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு, பூஜை நடந்தது. பெருந்துறை எம்.எல்.ஏ., ஜெயக்குமார், திட்டப்பணிகளை துவக்கி வைத்ததார்.
இதன்படி பெருந்துறை டவுன் பஞ்., மடத்துப்பாளையம் முதல் மாயா அவன்யூ வரை மண் சாலை, சட்டமன்ற உறுப்பினர் நிதி, 17 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலையாக அமைகிறது.
பெருந்துறை-கோவை பிரதான சாலை முதல் நான்கு வழிச்சாலை வழியாக ஓலப்பாளையம் செல்லும் தார்ச்சாலை, 77 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்படுகிறது. சிப்காட் நுழைவாயில் அருகே நிழற்கூடம், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் எம்.எல்.ஏ. நிதியில் அமைக்கப்படுகிறது. இதற்கான நிகழ்ச்சிகளில் பெருந்துறை அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் அருள் ஜோதி செல்வராஜ், ரஞ்சித் ராஜ், பெருந்துறை டவுன் பஞ்., தலைவர் ராஜேந்திரன், துணைத்தலைவர் சண்முகம், பெருந்துறை யூனியன் சேர்மன் சாந்தி ஜெயராஜ், பெருந்துறை டவுன் பஞ்., கவுன்சிலர்கள் அருணாசலம், வளர்மதி செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.-