/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/தற்செயல் விடுப்புடன் வருவாய் துறையினர் தர்ணா போராட்டம்தற்செயல் விடுப்புடன் வருவாய் துறையினர் தர்ணா போராட்டம்
தற்செயல் விடுப்புடன் வருவாய் துறையினர் தர்ணா போராட்டம்
தற்செயல் விடுப்புடன் வருவாய் துறையினர் தர்ணா போராட்டம்
தற்செயல் விடுப்புடன் வருவாய் துறையினர் தர்ணா போராட்டம்
ADDED : ஜூன் 26, 2025 01:54 AM
ஈரோடு, ஈரோடு, கொங்கு கலையரங்கம் அருகே இருந்து, வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், மாவட்ட தலைவர் ஜெகநாதன் தலைமையில் ஊர்வலமாக சென்று, கலெக்டர் அலுவலகம் வந்து, தர்ணாவில் ஈடுபட்டனர்.
மாநில அளவில், நேற்று வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஒரு நாள் தற்செயல் விடுப்புடன் தர்ணாவில் ஈடுபட்டனர். நில அளவை துறையில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களுக்கும், உரிய பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். வருவாய் துறை அலுவலர்கள் தாக்கப்படும் பட்சத்தில், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க சிறப்பு பாது
காப்பு சட்டம் ஏற்படுத்த வேண்டும். வருவாய், பேரிடர் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
வருவாய் துறை அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு அதிக பணிச்சுமை, மன அழுத்தம் ஏற்படும் வகையில் கால அவகாசம் இன்றி இலக்கு நிர்ணயிப்பதை தவிர்க்க வேண்டும். இத்துறையில் அவுட் சோர்சிங், தற்காலிக, தொகுப்பூதிய நியமனங்களை கைவிட்டு, நிரந்தர பணியாளர்களை நிரப்ப வேண்டும் என, போராட்டத்தில் வலியுறுத்தினர்.
மாவட்ட அளவில் வருவாய் துறையில், 849 பேர், நில அளவைத்துறையில், 154 பேர் தற்செயல் விடுப்பில் ஈடுபட்டனர்.