/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக 615 மரங்களை அகற்றும் பணி துவக்கம்நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக 615 மரங்களை அகற்றும் பணி துவக்கம்
நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக 615 மரங்களை அகற்றும் பணி துவக்கம்
நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக 615 மரங்களை அகற்றும் பணி துவக்கம்
நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக 615 மரங்களை அகற்றும் பணி துவக்கம்
ADDED : பிப் 06, 2024 10:52 AM
காங்கேயம்:
முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தில், 37 கோடி ரூபாய் மதிப்பில், காங்கேயம்-ஈரோடு சாலையில் (மாநில நெடுஞ்சாலை-91), திட்டுப்பாறை முதல் ஆலாம்பாடி வரை 6 கி.மீ., துாரம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இப்பகுதியில் சாலையோரம் உள்ள வேம்பு, புளியமரம், ஆலமரம் என, 50 ஆண்டுகளுக்கும் மேலான மரங்கள் வரிசையாக உள்ளன. அகலப்படுத்தும் போது இடையூறாக, 559 மரங்கள் இருப்பதாக, நெடுஞ்சாலை துறையினர் மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரைத்தனர்.
இதையடுத்து ஆய்வு நடந்து, மரங்களை வெட்ட முடிவு செய்து ஏலம் விடப்பட்டன. இவை, 4 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. இதேபோல் காங்கேயம்-பழையகோட்டை ரோடு பகுதியில், 1 கி.மீ., துார சாலை விரிவாக்கப் பணிக்கு, 56 மரங்கள் இடையூறாக இருப்பது கண்டறிந்து, அதுவும் ஏலம் விடப்பட்டன. தற்போது இந்த மரங்களை வெட்டி அகற்றப்படும் பணி தொடங்கியுள்ளது. மரம் வெட்டப்பட்டு அகற்றும் இடங்களில் சாலை வெளிச்சோடி நிழல் இல்லாது உள்ளது.
இருபுறமும் நிழலுடன் இதமாக காட்சியளித்த சாலை, கொஞ்சம் கொஞ்சமாக வெட்டவெளியாக மாறி வருவது, அவ்வழியே தினமும் சென்று வரும் வாகன ஓட்டிகளை, வேதனையில் ஆழ்த்தியுள்ளது.