/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/தீயணைப்பு துறை சார்பில் வெள்ளோட்டில் ஒத்திகைதீயணைப்பு துறை சார்பில் வெள்ளோட்டில் ஒத்திகை
தீயணைப்பு துறை சார்பில் வெள்ளோட்டில் ஒத்திகை
தீயணைப்பு துறை சார்பில் வெள்ளோட்டில் ஒத்திகை
தீயணைப்பு துறை சார்பில் வெள்ளோட்டில் ஒத்திகை
ADDED : ஜூலை 11, 2024 12:21 AM
சென்னிமலை: பருவ மழை காலத்தில், இயற்கை பேரிடர் அதிகளவில் ஏற்படும்.
ஆற்றில் தவறி விழுவது, வெள்ள நீரில் அடித்து செல்லக்கூடும் என்ற அபாயம் உள்ளது. இதனை தவிர்க்க, ஆண்டுதோறும் தீய-ணைப்பு துறை சார்பில், ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்படும்.அதன்படி, இந்தாண்டு வெள்ளோடு குளத்தில் சென்னிமலை தீய-ணைப்பு துறை சார்பில், மழை, புயல் மற்றும் வெள்ள காலங்-களில் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் விழிப்புணர்வுடன் செயல்படுவது, குறித்த ஒத்திகை நடந்தது. தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு சதீஸ் குமார் தலைமை வகித்தார். குளத்தில் தவறி விழுபவர்களை மீட்பது, வெள்ளத்தில் அடித்து செல்லப்ப-டுவர்களை மீட்பது, வெள்ளத்தின் போது உயிர், உடமைகளை காத்து கொள்வது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. ரப்பர் படகு, கயிறு கட்டி வெள்ளத்தில் சிக்கியவர்களை ஆற்றில் இருந்து மீட்பது, நீச்சலடித்து வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்-பாற்றுவது உள்ளிட்ட செயல்முறை விளக்கங்கள் பொது மக்களுக்கு செய்து காட்டப்பட்டது.