ADDED : ஜூன் 22, 2024 01:11 AM
சென்னிமலை: சென்னிமலையை அடுத்த நாமக்கல்பாளையத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி, 48; தறி பட்டறை தொழிலாளி.
இவரின் மகன் பிரபு, 24; சென்னிமலையில் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நண்பருடன் சேர்ந்து மது குடித்து விட்டு தந்தை முத்துப்பாண்டியிடம் அடிக்கடி தகராறு செய்வது வழக்கம். நேற்று முன்தினம் முத்துப்பாண்டி வேலை பார்க்கும் தறிப்பட்டறைக்கு பிரபு சென்றார். ஊர் சுற்றுவதை கண்டித்ததை கண்டித்து தகராறில் ஈடுபட்டார். தான் கொண்டு சென்ற கத்தியால் தந்தையின் கையில் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். தந்தை புகாரின்படி மகனை, சென்னிமலை போலீசார் கைது செய்தனர்.