Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/விதிமீறல் புகாரில் தடை பெற்ற குவாரி நிர்வாகம்

விதிமீறல் புகாரில் தடை பெற்ற குவாரி நிர்வாகம்

விதிமீறல் புகாரில் தடை பெற்ற குவாரி நிர்வாகம்

விதிமீறல் புகாரில் தடை பெற்ற குவாரி நிர்வாகம்

ADDED : ஜூலை 05, 2024 02:50 AM


Google News
டி.என்.பாளையம்:கோபி தாலுகா கொங்கர்பாளையம் ஊராட்சி கவுண்டம்பாளையத்தில், அறநிலையத்துறைக்கு சொந்தமான கொங்கணகிரி முருகன் மாதேஸ்வரன் கோவில் நிலம் உள்ளது. இந்நிலத்தை குவாரி உரிமையாளர்கள் ஆக்கிரமித்துள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ௪ம் தேதி உண்ணாவிரத போராட்டம் இருக்கப் போவதாக, விவசாயிகள் அடங்கிய போராட்ட குழுவினர், ஈரோடு எஸ்.பி ஜவஹரிடம் கடந்த, 2ம் தேதி மனு அளித்தினர்.

இதை தொடர்ந்து கோபி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., கண்ணப்பன் தலைமையில், போராட்ட குழுவினரை அதிகாரிகள் அழைத்து பேசினர். இதில் நாளை (௪ம் தேதி), குவாரியை அளவீடு செய்யப்போவதாக உறுதி கூறவே, உண்ணாவிரத்தை கைவிடுவதாக தெரிவித்தனர். இதன்படி ஆர்.டி.ஓ., கண்ணப்பன், சத்தி டி.எஸ்.பி., சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் குழு, அளவீடு செய்ய குவாரிக்கு நேற்று சென்றனர்.

'முறையான அனுமதி பெற்று குவாரி நடத்தி வருகிறோம். மேலும், அளவீடு செய்வதை எதிர்த்து, நீதிமன்றத்தில் தற்காலிக தடை பெற்றுள்ளோம்' என்று குவாரி நிர்வாகிகள் தெரிவித்தனர்.இதனால் அளவீடு செய்ய முடியாமல் அதிகாரிகள் குழுவினர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us