/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ரூ.3.48 கோடியில் திட்டப்பணி: தொடங்கி வைத்த அமைச்சர்ரூ.3.48 கோடியில் திட்டப்பணி: தொடங்கி வைத்த அமைச்சர்
ரூ.3.48 கோடியில் திட்டப்பணி: தொடங்கி வைத்த அமைச்சர்
ரூ.3.48 கோடியில் திட்டப்பணி: தொடங்கி வைத்த அமைச்சர்
ரூ.3.48 கோடியில் திட்டப்பணி: தொடங்கி வைத்த அமைச்சர்
ADDED : ஜன 06, 2024 07:28 AM
காங்கேயம்: வெள்ளகோவில் நகராட்சி பகுதியில், 3.48 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளை, அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார்.வெள்ளகோவில் நகராட்சி தீத்தாம்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில், 3.17 கோடி ரூபாய் மதிப்பில், நகராட்சிக்கு உட்பட்ட, 17 அரசு பள்ளிகளில் பழுது மற்றும் பராமரிப்பு பணிகளை தொடங்கி வைத்தார்.இரண்டாவது வார்டு கல்லாங்காட்டுவலசு காலனியில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, 20 லட்சம் ரூபாய் மதிப்பில் சமுதாய நலக்கூடம் கட்டும் பணி; 20வது வார்டு அகலரப்பாளையம்புதுாரில், 11 லட்சம் ரூபாய் மதிப்பில், 30,000 லிட்டர் கொள்ளளவு மேல்நிலைத் தொட்டி அமைக்கும் பணியை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார்.தொடர்ந்து வெள்ளகோவில் நகராட்சிக்கு சொந்தமான எரிவாயு தகனமேடையை, வெள்ளகோவில் ரோட்டரி அறக்கட்டளை வசம் ஒப்படைக்கப்பட்டது.நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி நான்காம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், வெள்ளக்கோவில் நகர தி.மு.க., செயலாளர் சபரி முருகானந்தன், வெள்ளகோவில் நகராட்சி தலைவர் கனியரசி, நகராட்சி கமிஷனர் வெங்கடேஸ்வரன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.