/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மின்வாரிய ஊழியர் சார்பில் போராட்ட ஆயத்த கூட்டம்மின்வாரிய ஊழியர் சார்பில் போராட்ட ஆயத்த கூட்டம்
மின்வாரிய ஊழியர் சார்பில் போராட்ட ஆயத்த கூட்டம்
மின்வாரிய ஊழியர் சார்பில் போராட்ட ஆயத்த கூட்டம்
மின்வாரிய ஊழியர் சார்பில் போராட்ட ஆயத்த கூட்டம்
ADDED : பிப் 24, 2024 03:53 AM
ஈரோடு: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு - சி.ஐ.டி.யு., - தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு, தமிழ்நாடு பவர் இன்ஜினியர்ஸ் ஆர்கனைசேஷன் சார்பில், போராட்டத்துக்கான ஆயத்தக்கூட்டம், ஈரோடு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் நடந்தது. மண்டல தலைவர் ஜோதிமணி தலைமை வகித்தார்.
தமிழக மின்வாரியத்தின் கடன், 1.60 லட்சம் கோடி ரூபாயாக உள்ளதை கணக்கில் கொண்டு, பணியாளர்களின் ஊதியம், ஓய்வூதியம், ஓய்வு கால பலன் குறித்து தெளிவான திட்டவரைவு வழங்க வேண்டும். இல்லையேல் தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். ஆனால், பொறுப்பேற்க அரசு மறுக்கிறது.
பஞ்சாப் மாநிலத்தைப் போல், மின்வாரிய கம்பெனியை மேலும் பல கம்பெனிகளாக பிரிக்க மாட்டோம் என தமிழக அரசு உறுதியளிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.