/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வினியோகம்பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வினியோகம்
பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வினியோகம்
பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வினியோகம்
பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வினியோகம்
ADDED : ஜன 08, 2024 11:15 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன், ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கும் பணி தொடங்கியது.
ரேஷன் அரிசி கார்டுதாரர்களுக்கு தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகைக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு கரும்பு, ௧,௦௦௦ ரூபாய் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படவுள்ளது.
இதற்கான டோக்கன் நேற்று முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதேசமயம் தகுதியான ரேஷன் கார்டுதாரர் குறித்த பட்டியல் வராததால், அதிகாரிகள் மட்டுமின்றி கடை ஊழியர்களும் குழப்பத்தில் இருந்தனர். ஆனாலும், ரேஷன் கடைகளில் நேற்று டோக்கன் வழங்கினர்.
வீடு, வீடாக சென்று வழங்கப்படும் என அறிவித்த நிலையில், தங்கள் பகுதி ரேஷன் கடைக்கு, மக்களே சென்று டோக்கன் பெற சென்றனர். மாநகரில் பல்வேறு ரேஷன் கடைகளிலும், டோக்கன் வாங்கி செல்ல காலை முதல் காத்து கிடந்தனர்.
பொங்கல் பரிசு டோக்கனில், தமிழக அரசின் சின்னமான ஸ்ரீவில்லிபுத்துார் கோபுரத்தை தவிர, வேறெதுவும் இடம் பெறவில்லை.
இதனிடையே கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்
குறிப்பில், '9ம் தேதி (நாளை) வரை டோக்கன் பெற்று
கொள்ளலாம்.
டோக்கன் பெற்றவர்களுக்கு, 10ம் தேதி முதல்,
14ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். இதுபற்றி புகார் இருந்தால், 1967 மற்றும் 1800-425-5901 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்' என்று தெரிவித்துள்ளார்.