/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஈரோட்டில் அம்மன் கோவில்களில் பொங்கல் விழாஈரோட்டில் அம்மன் கோவில்களில் பொங்கல் விழா
ஈரோட்டில் அம்மன் கோவில்களில் பொங்கல் விழா
ஈரோட்டில் அம்மன் கோவில்களில் பொங்கல் விழா
ஈரோட்டில் அம்மன் கோவில்களில் பொங்கல் விழா
ADDED : ஜன 04, 2024 11:03 AM
சென்னிமலை: சென்னிமலை, அடுத்துள்ள தொட்டம்பட்டி மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழா நேற்று நடந்தது.
இந்தாண்டு பொங்கல் விழா கடந்த டிச., 20ல், பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று காலை, சென்னிமலை பிராட்டியம்மன் கோவிலில் இருந்து, தீர்த்தக்குடங்களை மேளதாளம் முழங்க, பசுமாடு, குதிரை முன் செல்ல ஊர்வலமாக எடுத்து சென்றனர்.
இரவு பொங்கல் விழா நடந்தது, இன்று காலை குதிரை துலுக்குதல், அம்மை அழைத்தல், மாவிளக்கு அழைத்தல் நடக்கிறது, காலை, 11:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் நடக்கிறது.
பின் கும்பம் நீர்துறை சேருதல் நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு மஞ்சள் நீராடுதல், நாளை இரவு, 8:00 மணிக்கு மறு பூஜை அபிஷேகத்துடன் பொங்கல் விழா நிறைவு பெறுகிறது.
* ஈரோடு நாராயணவலசு, மகா மாரியம்மன் கோவிலில் நடப்பாண்டுக்கான பொங்கல் விழா கடந்த, 26ம் தேதி பூச்சாட்டப்பட்டு, கம்பம் நடப்பட்டு துவங்கியது. முக்கிய நிகழ்வான நேற்று பொங்கல் விழா, மாவிளக்கு பூஜை நடைபெற்றது.
திரளான பக்தர்கள் பொங்கலிட்டு அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். இன்று கம்பம் பிடுங்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது.
* குமலன்குட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு, நேற்று பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலை மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. இன்று கம்பம் பிடுங்கப்பட்டு கிணற்றில் விடப்படுகிறது.
* சூரம்பட்டி வலசு, சுயம்பு மாரியம்மன் கோவில் பொங்கல் விழா நேற்று நடந்தது. பக்தர்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். இன்று காலை கம்பம் எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
* ரங்கம்பாளையம் மகா மாரியம்மன் கோவில், ஈரோடு சென்னிமலை சாலை சுப்பிரமணிய நகரில் உள்ள சக்தி மாரியம்மன் கோவில், நல்லியம்பாளையம் மாரியம்மன் கோவில், முத்தம்பாளையம் மாரியம்மன் கோவில்களில் நேற்று பொங்கல் விழா விமர்சையாக நடந்தது.
* சென்னிமலை அடுத்துள்ள, பிடாரியூர் மாகாளியம்மன் பொங்கல் திருவிழா. திங்கள் கிழமை பூச்சாட்டுதனாடன் துவங்கியது. நேற்று பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு, இரவு கும்பத்தை கிணற்றில் விடும் விழா நடந்தது.
ஏராளமானோர் பொங்கல் வைத்து வழிபட்டனர்.