/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மாநகர பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு 'விர்ர்'மாநகர பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு 'விர்ர்'
மாநகர பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு 'விர்ர்'
மாநகர பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு 'விர்ர்'
மாநகர பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு 'விர்ர்'
ADDED : ஜூன் 01, 2024 06:41 AM
ஈரோடு : ஈரோடு மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களான பைகள், கேரி பேக், கப், டம்ளர், உணவு தட்டுகள் உட்பட பல்வேறு பொருட்கள் பயன்பாட்டில் உள்ளது.
அதே நேரத்தில் பெரும்பாலான ஹோட்டல், மீன், இறைச்சி கடைகள், சாலையோர உணவங்கள், சாலையோர பழக்கடைகளிலும், மக்கும் தன்மையற்ற பிளாஸ்டிக் பைகளில் தான் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதன் காரணமாக மாநகர் பகுதிகளில் சமீப காலமாக பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு மீண்டும் அதிகரித்துள்ளன. பிளாஸ்டிக் பொருள் தடுப்பு நடவடிக்கைகளை, மாநகராட்சி அதிகாரிகள் தீவிரப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து மக்கள் கூறியதாவது:மக்கும் தன்மையற்ற பாலித்தின் பொருட்களை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. அதேசமயம் இவற்றின் பயன்பாட்டை கட்டுப்படுத்த, மாநகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தி கடைகள், விற்பனை நிலையங்களுக்கு அபராதம் விதித்தனர். இதனால் பயன்பாடும் ஓரளவு குறைந்தது. சமீபமாக மீண்டும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.