/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பெரும்பள்ளம் ஓடைபாலத்தை திறக்க 10 நாட்கள் கெடு; கலெக்டரிடம் மனு பெரும்பள்ளம் ஓடைபாலத்தை திறக்க 10 நாட்கள் கெடு; கலெக்டரிடம் மனு
பெரும்பள்ளம் ஓடைபாலத்தை திறக்க 10 நாட்கள் கெடு; கலெக்டரிடம் மனு
பெரும்பள்ளம் ஓடைபாலத்தை திறக்க 10 நாட்கள் கெடு; கலெக்டரிடம் மனு
பெரும்பள்ளம் ஓடைபாலத்தை திறக்க 10 நாட்கள் கெடு; கலெக்டரிடம் மனு
ADDED : செப் 11, 2025 01:31 AM
ஈரோடு, ஈரோடு மாநகர் மக்கள் மேம்பாட்டு சங்க தலைவர் கைலாசம் தலைமையில், ஈரோடு கலெக்டர் கந்தசாமியிடம், நேற்று மனு வழங்கப்பட்டது.
இதுகுறித்து சட்ட ஆலோசகர் பழனிசாமி கூறியதாவது: ஈரோடு பெரியார் நகரில் பெரும்பள்ளம் ஓடை மீது உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பாலம் கட்டி ஒன்றரை ஆண்டுகளாகியும் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கவில்லை
இதுபற்றி தொடர்புடைய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. பாலத்தை திறக்க முடியாத வகையில், பாலத்துக்கு தொடர்பில்லாத பொருட்கள், இரும்பு கம்பிகளை ஒப்பந்ததாரர் குவித்து வைத்துள்ளார். அதிகாரிகள் ஆய்வு செய்து பாலத்தை திறக்க வேண்டும். இன்னும், 10 நாட்களுக்குள் பாலத்தை திறக்க தவறினால், மக்களை அழைத்து சென்று, சிறிய பள்ளத்தை மண் அள்ளிப்போட்டு மூடியும், பாலத்தில் வைக்கப்பட்டுள்ள இரும்புகளை அகற்றி பயன்பாட்டுக்கு திறப்போம். இவ்வாறு கூறினார்.