/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சுடுகாடு வசதி கோரி பி.டி.ஓ.,விடம் மனு சுடுகாடு வசதி கோரி பி.டி.ஓ.,விடம் மனு
சுடுகாடு வசதி கோரி பி.டி.ஓ.,விடம் மனு
சுடுகாடு வசதி கோரி பி.டி.ஓ.,விடம் மனு
சுடுகாடு வசதி கோரி பி.டி.ஓ.,விடம் மனு
ADDED : ஜூன் 14, 2025 07:02 AM
கோபி: கோபி யூனியன் அலுவலகத்தில், நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. பி.டி.ஓ., ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். பல்வேறு நுகர்வோர் அமைப்பினர் பங்கேற்றனர்.
இதில் கோபி நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு துணை செய-லாளர் சண்முகம், பி.டி.ஓ.,விடம் வழங்கிய மனுவில் கூறியதா-வது:
நட்டுவன்காடு அருகே நெடுஞ்செழியன் வீதியில், நான்கு தெரு-விளக்குகள் அமைத்து தர வேண்டும். அதே வீதியில் மோசமாக உள்ள தார்ச்சாலையை புதுப்பிக்க வேண்டும். நட்டுவன்காடு, மல்லநாய்க்கனுார் பகுதிக்கு படிப்பகம் மற்றும் ரேசன் கடை அமைத்து தர வேண்டும். இப்பகுதியில், 100 குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு சுடுகாடு வசதி அமைத்து தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தார்.
நாயால் விபத்தில் சிக்கிய கார்
உயிர் தப்பிய பேராசிரியைஈரோடு: ஈரோடு, டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் வனஜா, 24; பெருந்-துறை அருகே தனியார் கல்லுாரி உதவி பேராசிரியை. ஈரோட்டில் இருந்து கல்லுாரிக்கு ஹூன்டாய் அசென்ட் காரில் நேற்று காலை, 9:30 மணி அளவில் சென்றார்.
பெருந்துறை சாலையில் ஏ.இ.டி., பள்ளி அருகே சென்றபோது, சாலையின் குறுக்கே திடீரென புகுந்த நாய் மீது மோதுவதை தவிர்க்க, காரை திரும்பியபோது மையத்தடுப்பில் ஏறி உரசி, தலைகீழாக கவிழ்ந்தது. காரில் ஏர் பேக் விரிந்ததால், சிறு காயத்-துடன் வனஜா உயிர்
தப்பினார்.