/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நடிகர் விஜய் ஈரோடு வருகை எஸ்.பி.,யிடம் அனுமதி கோரி மனு நடிகர் விஜய் ஈரோடு வருகை எஸ்.பி.,யிடம் அனுமதி கோரி மனு
நடிகர் விஜய் ஈரோடு வருகை எஸ்.பி.,யிடம் அனுமதி கோரி மனு
நடிகர் விஜய் ஈரோடு வருகை எஸ்.பி.,யிடம் அனுமதி கோரி மனு
நடிகர் விஜய் ஈரோடு வருகை எஸ்.பி.,யிடம் அனுமதி கோரி மனு
ADDED : செப் 16, 2025 01:48 AM
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில், த.வெ.க., தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி மாவட்ட செயலர் பாலாஜி, கட்சியினருடன் எஸ்.பி., சுஜாதாவிடம் நேற்று மனு அளித்தார்.
த.வெ.க., தலைவர் விஜய் அக்.,4ல், சாலை மார்க்கமாக ஈரோடு மாவட்டத்துக்கு வந்து மக்களை சந்திக்கிறார். இதற்கு தேவையான பாதுகாப்பை வழங்கவும், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதியளிக்க வேண்டும். பெருந்துறை அண்ணா சிலை அருகே காலை 9:00 மணிக்கு வரவேற்பு, 9:30 மணிக்கு திண்டல் ரிங் ரோடு ரவுண்டானா, 10 மணிக்கு சோலார் பிரிவு ரவுண்டானா, காளைமாட்டு சிலை வழியாக சென்று ப.செ.பூங்காவில் அமைந்துள்ள ஈ.வெ.ரா.சிலைக்கு மாலை அணிவிக்கிறார். 10:30 மணிக்கு மணிக்கூண்டு வழியாக சத்தி ரோடு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் அருகே பேசுகிறார்.
மதியம், 12:00 மணிக்கு சித்தோடு நால்ரோட்டில் பேசுகிறார், தொடர்ந்து பவானி-அந்தியூர் சாலை, அந்தியூர் பஸ் ஸ்டாண்ட் அருகே பேசுகிறார். கோபி செல்லும் வழியில் அத்தாணியில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. கோபி பஸ் ஸ்டாண்ட் அருகே 4:30 மணிக்கும், சத்தி பஸ் ஸ்டாண்ட் அருகே, 5:30 மணிக்கு விஜய் பேசுகிறார். பின்னர் அங்கிருந்து மேட்டுப்பாளையம் வழியே நீலகிரி செல்கிறார்.