Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பட்டா விவகாரம்; தாலுகா அலுவலகம் முற்றுகை

பட்டா விவகாரம்; தாலுகா அலுவலகம் முற்றுகை

பட்டா விவகாரம்; தாலுகா அலுவலகம் முற்றுகை

பட்டா விவகாரம்; தாலுகா அலுவலகம் முற்றுகை

ADDED : டிச 02, 2025 02:35 AM


Google News
சத்தியமங்கலம், சத்தி தாலுகா அலுவலகத்தை, இ.கம்யூ., நகர செயலாளர் ஜமேஷ் தலைமையிலானோர், நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: சத்தியமங்கலம் நகரத்தில் புகைப்படத்துடன் கூடிய மனைவரி தோராய பட்டா, 2,200 வழங்கப்பட்டும். 3,000க்கு மேற்பட்ட பட்டாக்கள் வழங்கப்படாத நிலையில், செட்டில்மெண்ட் அலுவலகம் மூடப்பட்டு விட்டது. வழங்கப்பட்ட தோராயப் பட்டா மற்றும் தோராய பட்டா வழங்கப்படாத இனங்களை வகைப்படுத்தி, ஆன்லைன் பட்டாவாக வழங்கப்படாததால் பத்திரப்பதிவு மறுக்கப்படுகிறது. இதனால், 5,௦௦௦க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், பத்திரங்களை பதிவு செய்ய முடியாத நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கொமாரபாளையம் பஞ்.,ல் பட்டா வழங்க அரசு நிலம் ஒதுக்கி, 1,000 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு, பிறகு அரசு உபயோகத்துக்கு எடுத்துக்கொண்டனர். இதேபோல் தோப்பூர், குள்ளங்காடு, சூரிப்பள்ளம் - அண்ணாநகர், ஆண்டவர் நகர், புளியங்கோம்பை, வண்டிப்பட்டறை, தேள்கரடு அண்ணாநகர், உதயமரத்து மேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு கட்டி பல ஆண்டுகளாக குடியிருக்கும் மக்களுக்கு பட்டா, ஆன்லைன் பட்டா வழங்கப்படவில்லை என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தாலுகா அலுவலகத்தை, 400க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சத்தி போலீசார், முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தரம், தாசில்தார் ஜமுனாராணி பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் நகராட்சி பகுதியில், 2,000 பேருக்கு பட்டா வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 30 நாட்களில் வழங்கப்படும் என கூறியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us