/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பாரா வாலிபால் போட்டி: ஈரோடு பெண்கள் அபாரம்பாரா வாலிபால் போட்டி: ஈரோடு பெண்கள் அபாரம்
பாரா வாலிபால் போட்டி: ஈரோடு பெண்கள் அபாரம்
பாரா வாலிபால் போட்டி: ஈரோடு பெண்கள் அபாரம்
பாரா வாலிபால் போட்டி: ஈரோடு பெண்கள் அபாரம்
ADDED : பிப் 06, 2024 10:54 AM
ஈரோடு: தமிழ்நாடு பாரா வாலிபால் சங்கம், ஈரோடு உணர்வுகள் அமைப்பு சார்பில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஆற்றல் கோப்பை வாலிபால் போட்டி நடந்தது. ஆண்கள் பிரிவில், 18 அணிகள், பெண்கள் பிரிவில் ஒன்பது அணிகள் கலந்து கொண்டன.
சென்னிமலை ராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில் நடந்த போட்டிக்கு, தமிழ்நாடு பாரா கைப்பந்து கழக தலைவர் மக்கள் கே.ராஜன் தலைமை வகித்தார். செயலாளர் ராஜா வரவேற்றார். ஆற்றல் அறக்கட்டளை நிறுவன தலைவர் ஆற்றல் அசோக்குமார், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, வெற்றி பெற்ற அணிகளுக்கு டிராபி, சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கி பாராட்டினார்.
பெண்கள் பிரிவில் வேலுார், கோவை, மதுரை, ஈரோடு மாவட்ட அணிகள் முதல் நான்கு இடங்களை பிடித்ததன. ஆண்கள் பிரிவில் ராணிப்பேட்டை, கடலுார், கோவை, சேலம் மாவட்ட வீரர்கள் முதல் நான்கு இடங்களை பிடித்தனர். நிறைவு விழாவில் திரைப்பட நடிகர் ரிஷிகாந்த் வாழ்த்துரை வழங்கி பேசினார். ராஜீவ் காந்தி பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.