/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ புறவழிச் சாலை அமையும் விவசாய நிலம் ஆய்வுக்கு எதிர்ப்பு புறவழிச் சாலை அமையும் விவசாய நிலம் ஆய்வுக்கு எதிர்ப்பு
புறவழிச் சாலை அமையும் விவசாய நிலம் ஆய்வுக்கு எதிர்ப்பு
புறவழிச் சாலை அமையும் விவசாய நிலம் ஆய்வுக்கு எதிர்ப்பு
புறவழிச் சாலை அமையும் விவசாய நிலம் ஆய்வுக்கு எதிர்ப்பு
ADDED : ஜூன் 11, 2025 01:36 AM
புன்செய்புளியம்பட்டி, புன்செய் புளியம்பட்டி அருகே செல்லம்பாளையத்தில், புறவழிச் சாலை அமைய உள்ள விவசாய நிலங்களை, நில எடுப்பு தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், நேற்று ஆய்வு செய்தனர்.
தகவலறிந்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட அமைப்பு செயலாளர் ஜோதி அருணாச்சலம் தலைமையில் திரண்ட விவசாயிகள், நிலம் எடுப்பு சம்பந்தமாக விவசாயிகளுக்கு இதுவரை அறிவிப்பு கடிதம் கொடுக்கவில்லை. எனவே அளவீடு செய்யக்கூடாது என்று வாக்குவாதம் செய்தனர்.இதனால் சுதாரித்த அதிகாரிகள், நீங்கள் கூறுவதை கடிதமாக எழுதிக் கொடுங்கள் என்று, விவசாயிகளிடம் கேட்டனர். அதிகாரிகள் கேட்டபடடி விவசாயிகள் கடிதம் கொடுக்கவே அளவீடு செய்யாமல், அதிகாரிகள் சென்றனர்.