Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/இரண்டாம் போக பாசனத்துக்கு கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு

இரண்டாம் போக பாசனத்துக்கு கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு

இரண்டாம் போக பாசனத்துக்கு கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு

இரண்டாம் போக பாசனத்துக்கு கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு

ADDED : ஜன 08, 2024 12:24 PM


Google News
பவானிசாகர்: பவானிசாகர் அணையில் இருந்து இரண்டாம் போக பாசனத்துக்கு, கீழ்பவானி வாய்க்காலில் நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை மூலம் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்தில், 2.07 லட்சம் ஏக்கர் நிலங்களும், அரக்கன் கோட்டை-தடப்பள்ளி மற்றும் காளிங்கராயன் வாய்க்கால் பாசனங்களில், 40 ஆயிரத்து, 247 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. கடந்த ஆகஸ்ட், 15 முதல் டிச.,28 வரை, கீழ்பவானி வாய்க்கால் முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

இரண்டாம் போக புன்செய் பாசனத்துக்கு, பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில், நேற்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது. அணைக்கோட்ட நீர்வளத்துறை அதிகாரிகள், விவசாய சங்கத்தினர் நீரை திறந்து வைத்தனர்.

முதல் கட்டமாக, 500 கன அடி திறக்கப்பட்டு, ௧,000 கன அடியாக மாலையில் அதிகரிக்கப்பட்டது. படிப்படியாக உயர்த்தி, 2,300 கன அடி தண்ணீர் திறக்கப்படும். இதனால் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்தில், ஒரு லட்சத்து 3,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். அதேசமயம் அணை நீர்மட்டம் நேற்று, 82.77 அடி, நீர் இருப்பு, 17.1 டி.எம்.சி.,யாக இருந்தது. நீர்வரத்து, 642 கன அடியாக இருந்தது. மே, 1ம் தேதி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும். தண்ணீரை விவசாயிகள்

சிக்கனமாக பயன்படுத்த, நீர்வளத்துறை அதிகாரிகள் வலியுறுத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us