/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/காலிங்கராயன் பாசனத்துக்கு தண்ணீர் திறப்புகாலிங்கராயன் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
காலிங்கராயன் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
காலிங்கராயன் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
காலிங்கராயன் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
ADDED : ஜூலை 13, 2024 08:08 AM
பவானி: பவானி அருகே காலிங்கராயன் அணைக்கட்டிலிருந்து, பாசனத்-துக்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.
ஈரோடு எம்பி., பிரகாஷ், தண்ணீரை திறந்து வைத்தார். சீறிப்பாய்ந்தோடிய தண்ணீரில், பாசன விவசாயிகள் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள், மலர் துாவினர். மொத்தம், 15 ஆயிரத்து, 743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் நிலையில், 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்-கப்படும். அதாவது நவ., 8ம் தேதி வரை, 5,184 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்து-றையினர் தெரிவித்தனர். திறக்கப்பட்ட தண்ணீர், ஈரோடு, மொடக்-குறிச்சி, கொடிமுடி வரை, ௮௪ கி.மீ., பாய்ந்தோடி நொய்யலில் கலக்கிறது.வாழை, மஞ்சள், நெல் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு, அதிகாரிகள் வேண்-டுகோள் விடுத்துள்ளனர். முன்னதாக அணைக்கட்டு பகுதியில் உள்ள காலிங்கராயன் சிலைக்கு, எம்.பி., பிரகாஷ், பொதுப்பணித்-துறை செயற் பொறியாளர் சபரிநாதன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.