/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மனு கொடுத்து 3 ஆண்டுகளுக்கு பிறகு ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் மனு கொடுத்து 3 ஆண்டுகளுக்கு பிறகு ஆய்வுக்கு வந்த அதிகாரிகள்
மனு கொடுத்து 3 ஆண்டுகளுக்கு பிறகு ஆய்வுக்கு வந்த அதிகாரிகள்
மனு கொடுத்து 3 ஆண்டுகளுக்கு பிறகு ஆய்வுக்கு வந்த அதிகாரிகள்
மனு கொடுத்து 3 ஆண்டுகளுக்கு பிறகு ஆய்வுக்கு வந்த அதிகாரிகள்
ADDED : ஜூன் 18, 2025 01:13 AM
பவானி, ஈரோடு மாவட்டம் பவானி அருகே குருப்பநாயக்கன்பாளையம், என்.ஜி.ஜி.ஓ.,காலனியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். கடந்த, 2022 ஆண்டு, மே, 5ல் அப்போதைய பஞ்., தலைவர், திருப்பூர் எம்.பி., சுப்பராயனிடம் மனு கொடுத்தார்.
அதில், குருப்பநாயக்கன்பாளையம் பஞ்., ராணாநகரில், சமூதாயக்கூடம் கட்டப்பட்டது. இப்பகுதி மக்கள், 400 ரூபாய் கட்டி, சிறுசிறு குடும்ப நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர். அதன் பின் ஓராண்டாக எவ்வித நிகழ்ச்சியும் நடத்தவில்லை. தற்போது சமுதாய கூடம், புதர்மண்டி, குப்பை நிரம்பி அசுத்தமாக காணப்படுகிறது. பஞ்., நிர்வாகம் பராமரித்து, ஏழை மக்களுக்கு பயன்பெறும் வகையில் கொண்டு வர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று பவானி யூனியன் அலுவலக அதிகாரிகள், மற்றும் பஞ்., கிளார்க் உட்பட்டோர் சென்று, சமுதாயகூடத்தை ஆய்வு செய்தனர். பராமரிப்பதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ?