/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ இரும்பு கேட் விழுந்து வடமாநில சிறுவன் சாவு இரும்பு கேட் விழுந்து வடமாநில சிறுவன் சாவு
இரும்பு கேட் விழுந்து வடமாநில சிறுவன் சாவு
இரும்பு கேட் விழுந்து வடமாநில சிறுவன் சாவு
இரும்பு கேட் விழுந்து வடமாநில சிறுவன் சாவு
ADDED : செப் 16, 2025 02:08 AM
காங்கேயம், திருப்பூர் மாவட்டம், காங்கேயம், அரசம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் தேங்காய் களத்தில், மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த சபுரலிசேக், 30, குடும்பத்துடன் களத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில் சபுரலிசேகின் மகன் சாரூத், 12, தேங்காய் களத்தின் வெளியே உள்ள இரும்பு கேட்டில் ஏறி விளையாடி உள்ளார்.
அப்போது கேட் கவிழ்ந்து, சிறுவன் மீது விழுந்ததில் பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.