ADDED : செப் 26, 2025 01:19 AM
சத்தியமங்கலம் :கடம்பூர் மலை குத்தியாலத்தூர் பஞ்., கடம்பூர் பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். மோட்டார் அடிக்கடி பழுதானதால் நான்கு மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பஞ்.,ல் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை இல்லை.
இதனால் நுாற்றுக்கும் மேற்பட்ட மக்கள், நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். கடம்பூர் போலீசார், சத்தி பி.டி.ஓ., அர்த்தனாரீஸ்வரன் பேச்சுவார்த்தை நடத்தினார். இரண்டு நாட்களுக்குள் மோட்டாரை சரி செய்து குடிநீர் வழங்குவதாக கூறவே மறியலை கைவிட்டனர். மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.