Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மாவட்ட பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரூ.4.52 கோடி மதிப்பில் புதிய கருவி, அரங்கு திறப்பு

மாவட்ட பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரூ.4.52 கோடி மதிப்பில் புதிய கருவி, அரங்கு திறப்பு

மாவட்ட பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரூ.4.52 கோடி மதிப்பில் புதிய கருவி, அரங்கு திறப்பு

மாவட்ட பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரூ.4.52 கோடி மதிப்பில் புதிய கருவி, அரங்கு திறப்பு

ADDED : ஜூன் 07, 2025 01:20 AM


Google News
ஈரோடு, ஈரோடு மாவட்ட அரசு தலைமை பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்குகள் திறப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி முன்னிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், மூன்றாவது தளத்தில் உள்ள சீமாங் அறுவை அரங்கில், 2.25 கோடி ரூபாய் மதிப்பில் 2 'ெஹப்பா பில்டர்'களை திறந்து வைத்தார்.

மேலும் எட்டாம் தளத்தில் பல்நோக்கு சிறப்பு அறுவை அரங்கில், 2 ெஹப்பா பில்டர்கள், குழந்தைகள் நலப்பிரிவில் ஊட்டச்சத்து மறுவாழ்வு மையம் ஆகியவற்றை திறந்து வைத்தார். இவற்றின் மொத்த மதிப்பு, 4.52 கோடி ரூபாயாகும். இங்கு, 8.50 கோடி ரூபாயில் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் பொருத்துவதற்கான பணி நடந்து வருகிறது. 1 கோடி ரூபாயில் நவீன சமையல் கூடம் அமைக்கவும், 6.95 லட்சத்தில் டிஜிட்டல் எக்ஸ்ரே, 15 லட்சம் ரூபாயில் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் சென்சார் இன்டிகிரேசன் திரபியூடிக் பார்க்' அமைக்க நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், இங்கு, 2,700 வெளி நோயாளிகள், 540 உள் நோயாளிகள் சிகிச்சை வழங்கப்படுகிறது, என தெரிவித்தனர்.நிகழ்ச்சியில் எம்.பி., அந்தியூர் செல்வராஜ், எம்.எல்.ஏ., சந்திரகுமார், உறைவிட மருத்துவர் சசிரேகா, கண்காணிப்பு அதிகாரி வெங்கடேஷ், துணை இயக்குனர் கவிதா உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us