/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பராமரிக்காமல் மெத்தனம்; இடிப்பதில் ஆர்வம் வணிக வளாகத்தின் மீது நகராட்சிக்கு பாசம் பராமரிக்காமல் மெத்தனம்; இடிப்பதில் ஆர்வம் வணிக வளாகத்தின் மீது நகராட்சிக்கு பாசம்
பராமரிக்காமல் மெத்தனம்; இடிப்பதில் ஆர்வம் வணிக வளாகத்தின் மீது நகராட்சிக்கு பாசம்
பராமரிக்காமல் மெத்தனம்; இடிப்பதில் ஆர்வம் வணிக வளாகத்தின் மீது நகராட்சிக்கு பாசம்
பராமரிக்காமல் மெத்தனம்; இடிப்பதில் ஆர்வம் வணிக வளாகத்தின் மீது நகராட்சிக்கு பாசம்
ADDED : ஜூன் 22, 2025 01:03 AM
கோபி, கோபி பஸ் ஸ்டாண்ட் எதிரே, நகராட்சி நிர்வாகத்தின் மூன்று தளத்துடன் கூடிய வணிக வளாக கட்டடம் உள்ளது. இங்கு, 74 கடைகள் உள்ளன. இதில் தற்போது செல்போன், ஜெராக்ஸ், மெடிக்கல், பலகாரக்கடை மற்றும் பேக்கரி என, ௩௪ கடைகள் செயல்படுகின்றன. மீதி கடைகள் பூட்டப்பட்டுள்ளன. வணிக வளாகத்தை கோபி நகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை. இதனால் இரு தளத்தின் கைப்பிடி சுவர் மற்றும் சீலிங் பகுதி, கான்கிரீட் கட்டமைப்பில் விரிசல் விழுந்துள்ளது. முதல் தளத்தின் பின் பகுதியில் ஆண்கள் கழிப்பிடத்துக்கு செல்லும் வழியில் கைப்பிடி சுவர் பல ஆண்டுகளுக்கு முன் இடிந்து விட்டது. இதனால் அவ்வழியே நடமாடுவோர், முதல் தளத்தில் இருந்து தரை தளத்துக்கு பல்டி அடிக்கும் சூழல் நிலவுகிறது. பெண்கள் கழிப்பிடமும் பராமரிப்பின்றி மோசமாக உள்ளது. இதனால் கடை நடத்துவோர் அவதிக்கு ஆளாகின்றனர்.
இதுகுறித்து கடைக்காரர்கள் சிலர் கூறியதாவது: வணிக வளாக கட்டடத்தை பராமரித்து பயன்படுத்தியிருந்தால், பல மாதங்களாக மூடியே கிடக்கும், 40 கடைகளால் நகராட்சிக்கு வருவாய் கிடைத்திருக்கும். ஆனால் பராமரிக்க ஆர்வம் காட்டாமல், வணிக வளாகத்தை இடிப்பதை குறிக்கோளாக கொண்டுள்ளனர். வணிக வளாகத்தை இடிக்க காட்டும் ஆர்வத்தை கைவிட்டு, அதை பராமரிக்க முன்வர வேண்டும். இவ்வாறு கூறினர்.
இதுகுறித்து கோபி நகராட்சி சேர்மன் நாகராஜ் கூறும்போது, 'வணிக வளாக கட்டடம் மிகவும் வீக்காக உள்ளது. பராமரிக்க இயலாது என்பதால், புதியதாக இடித்து கட்ட விரைவில் டெண்டர் நடக்கவுள்ளது' என்றார்.