/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ.30,000 லஞ்சம் கோபி நகராட்சி ஊழியர் கைது ரூ.30,000 லஞ்சம் கோபி நகராட்சி ஊழியர் கைது
ரூ.30,000 லஞ்சம் கோபி நகராட்சி ஊழியர் கைது
ரூ.30,000 லஞ்சம் கோபி நகராட்சி ஊழியர் கைது
ரூ.30,000 லஞ்சம் கோபி நகராட்சி ஊழியர் கைது
ADDED : மார் 26, 2025 01:31 AM

கோபி:ஈரோடு மாவட்டம், கோபியைச் சேர்ந்தவர் வருண், 30; சிவில் இன்ஜினியர். புதிய கட்டடம் கட்டுமானப் பணிக்கான அனுமதி கோரி, கோபி நகராட்சி அலுவலக நகரமைப்பு அலுவலகத்தை அணுகினார்.
பிரிவு உதவியாளர் சுப்பிரமணி, 50, என்பவர், 30,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். தர விரும்பாத வருண், ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசில் புகாரளித்தார்.
நகராட்சி அலுவலகத்துக்கு நேற்று காலை, 11:00 மணிக்கு சென்ற வருண், 30,000 ரூபாயை வழங்க, பணத்தை பெற்ற சுப்பிரமணியனை, மறைந்திருந்த போலீசார் கையும், களவுமாக கைது செய்தனர்.