Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பவானி-மேட்டூர்-தொப்பூர் சாலை டோல்கேட்டை திரும்ப பெற அமைச்சரிடம் எம்.பி., வலியுறுத்தல்

பவானி-மேட்டூர்-தொப்பூர் சாலை டோல்கேட்டை திரும்ப பெற அமைச்சரிடம் எம்.பி., வலியுறுத்தல்

பவானி-மேட்டூர்-தொப்பூர் சாலை டோல்கேட்டை திரும்ப பெற அமைச்சரிடம் எம்.பி., வலியுறுத்தல்

பவானி-மேட்டூர்-தொப்பூர் சாலை டோல்கேட்டை திரும்ப பெற அமைச்சரிடம் எம்.பி., வலியுறுத்தல்

ADDED : மே 22, 2025 01:40 AM


Google News
ஈரோடு ஈரோடு மாவட்டம் பவானி - மேட்டூர் - தொப்பூர் சாலை டோல்கேட்டை திரும்ப பெறக்கோரி, மத்திய சாலை போக்கு

வரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு, திருப்பூர் எம்.பி., சுப்பராயன் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:

கடந்த, 2017ல், 6 வழிச்சாலையாக மேம்படுத்த பவானி - மேட்டூர் - தொப்பூர் (எச்.544.எச்.,) சாலை தேர்வாகி, பணி துவங்கி இதுவரை மேம்படுத்தப்படவில்லை. தொழில், வர்த்தகம், பொருளாதாரம், விவசாயத்துக்கும் உத்வேகம் தரும் நோக்கில் துவங்கப்பட்ட இத்திட்டம், முழுமை பெறவில்லை.

தொப்பூர் - மேட்டூர் இடையே, 45 கி.மீ., தேசிய நெடுஞ்சாலை பணிகள் இன்னும் துவங்கவில்லை. மேட்டூர் மற்றும் பவானிக்கு இடையே, 40 கி.மீ., நீளம், அகலப்படுத்தும் பணியும் துவங்கவில்லை. திட்டமிட்டபடி பணிகள் நடக்காததால், எருமப்பட்டி கிராமத்துக்கு அருகே தொப்பூரில் இருந்து மேட்டூர் வரையிலும், மேட்டூரில் இருந்து பவானி வரையில் சிங்கம்பட்டி கிராமம் உட்பட, இரு இடங்களில் சுங்கச்சாவடிகள் நிறுவப்பட்டுள்ளன.

இச்சாலையை பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள், சிறு வணிகர்கள், என்பதால் கடும் நிதி இழப்புக்கு ஆளாகின்றனர். அவர்களது குறைந்த வருவாயில், சுங்க கட்டணம் செலுத்துவது சிரமமாக உள்ளதால், சுங்கச்சாவடிகளை திரும்ப பெற வேண்டும். அதே நேரம் சாலை விரிவாக்கப்பணியை விரைவு

படுத்தி முடிக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us