ADDED : ஜூன் 01, 2025 01:24 AM
பவானி, கறவை மாடு வாங்குதற்கு, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி, பவானியை அடுத்த கீழ்வாணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நேற்று நடந்தது.
அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம், 37 பேருக்கு தலா, 87 ஆயிரம் வீதம், 32.19 லட்சம் ரூபாய்க்கு கறவை மாட்டு கடனும், கீழ்வாணி மற்றும் மூங்கில்பட்டி பகுதியை சேர்ந்த, மகளிர் சுய உதவி குழுவினருக்கு, 32.42 லட்சம் மதிப்பிலான கடனுதவி என, 40 பேருக்கு, 64.64 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கினார்.