/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மருத்துவ கழிவுகளை அகற்றிய ஜி.ெஹச்., தொழிலாளி மயக்கம்மருத்துவ கழிவுகளை அகற்றிய ஜி.ெஹச்., தொழிலாளி மயக்கம்
மருத்துவ கழிவுகளை அகற்றிய ஜி.ெஹச்., தொழிலாளி மயக்கம்
மருத்துவ கழிவுகளை அகற்றிய ஜி.ெஹச்., தொழிலாளி மயக்கம்
மருத்துவ கழிவுகளை அகற்றிய ஜி.ெஹச்., தொழிலாளி மயக்கம்
ADDED : ஜூன் 20, 2024 06:29 AM
ஈரோடு : ஈரோடு அரசு மருத்துவமனையில், மருத்துவ கழிவுகளை வெற்று கையுடன் அகற்றிய தொழிலாளி, மயக்கம், வாந்தியால் அனுமதிக்கப்பட்டார்.ஈரோடு அரசு மருத்துவமனையில் க்யூ.பி.எம்.எஸ்., என்ற தனியார் பாதுகாப்பு நிறுவனம் மூலம், 120க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்கின்றனர்.
பாதுகாப்பு, துாய்மைப்பணி, வார்டுகளில் குறிப்பிட்ட பணிகள் என செய்து வருகின்றனர். நேற்று ராமகிருஷ்ணன் என்ற தொழிலாளி, அரசு மருத்துவமனையின் மருத்துவ கழிவுகளை போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி, வெற்று கையில் அகற்றினார்.அப்போது சிறிது நேரத்தில் அவருக்கு தலை சுற்றல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அங்கிருந்த சக தொழிலாளர்கள், அவரை துாக்கி வந்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். மருத்துவ கழிவுகளை அகற்றியபோது, அதில் இருந்த ஊசி, பிற மருந்துகள் இவரது உடலில் பட்டு, ஒவ்வாமை ஏற்பட்டு இருக்கும் என்ற கோணத்தில், அவருக்கு சிகிச்சை வழங்கி வருகின்றனர். மருத்துவமனை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் உட்பட டாக்டர்கள், அவரை பார்த்து, சிகிச்சை விபரங்களை கேட்டறிந்தனர்.